HOME

06 November 2023

11 ஆம் வகுப்பு வரலாறு - பாடக்குறிப்பேடு - வாரம் 9

11 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 12, 13

தேதி  :       

வகுப்பு  11 ஆம் வகுப்பு      

பாடம்  : வரலாறு     

தலைப்பு  : 12. பாமினி மற்றும் விஜயநகர அரசுகள், 13.பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம்  

கற்பித்தல் துணைக் கருவிகள் :       

திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.  

கற்பித்தல் நோக்கங்கள் :       

1. பாமினி சுல்தான்களின் ஆட்சியை அறியச் செய்தல்.

2. விஜயநகர அரசர்களின் ஆட்சியை புரியச் செய்தல்.

3. பக்தி இயக்கம், சூஃபி இயக்கம் உணரச் செய்தல்.

4. பக்தி இயக்க சீர்திருத்தவாதிகளை விளங்கச் செய்தல்.

ஆயத்தம் செய்தல் :      

1.டெல்லி சுல்தானியம் வீழ்ச்சிக்கான காரணங்கள் யாவை?

2. தென்னிந்தியாவில் தோன்றிய சுதந்திர அரசுகள் யாவை?

3. தற்போது இந்தியாவில் உள்ள மதங்கள் யாவை?

4. சைவம், வைணவம் பற்றி நீ அறிந்தது என்ன?

பாடக் குறிப்புகள் :      

முகமது பின் துக்ளக் ஆட்சிக் காலத்தில் தென்னிந்தியாவில் சுதந்திர அரசுகள் எழுச்சி பெற்றன. 1333 இல் மதுரை சுல்தானிம், 1336 இல் விஜயநகர அரசு, 1347 இல் பாமினி அரசு ஆகியன உதயமானது. இதே காலகட்டத்தில் இந்துக்கள் பக்தி இயக்கத்தையும் முஸ்லிம்கள் சூஃபி இயக்கத்தையும் தோற்றுவித்து பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தனர்.

* விஜயநகர, பாமினி அரசுகளின் கல்வெட்டு சான்றுகள்

* வராகன், டங்கா நாணயங்கள், அயல்நாட்டவர் குறிப்புகள்

* பாமினி அரசு - அலாவுதீன் ஹசன் கங்கு பாமன் ஷா

* முதலாம் முகமது, மூன்றாம் முகமது, முகமது கவான்

* கோல்கொண்டா கோட்டை, பாமினி அரசின் வீழ்ச்சி

* விஜயநகர அரசு - ஹரிஹரர், புக்கர், கிருஷ்ண தேவராயர்

* பாமினி-விஜயநகர அரசுகளிடையே தொடர் போர்கள்

* விஜயநகர அரசின் வீழ்ச்சி - தலைக்கோட்டைப் போர்

* விஜயநகர நிர்வாகம் - அஷ்டதிக் கஜங்கள், நாயக்க முறை

* விஜயநகர சமூகம், பொருளாதாரம், கலை கட்டடக்கலை

* தென் இந்தியாவில் பக்தி இயக்கம் - சைவம், வைணவம்

* சூபியிஸத்தின் தாக்கம், பக்தி இயக்கம் சிறப்பியல்புகள்

* பக்தி இயக்கவாதிகள் - இராமானந்தர், கபீர், குருநானக்

* ரவிதாஸ், சூர்தாஸ், நாமதேவர், சைதன்யர், துக்கராம், மீராபாய்

* பக்தி இயக்கத்தின் தாக்கம் - முக்தி கோட்பாடு, சமத்துவம்

மதிப்பிடுதல் :      

1. விஜயநகர அரசு யாரால் தோற்றுவிக்கப்பட்டது?

2. இரண்டாம் அலெக்சாண்டர் என்பவர் யார்?

3. இராமானந்தரின் போதனைகள் யாவை?

4. பக்தி இயக்கத்தின் விளைவுகளை கூறுக.

கற்றல் விளைவுகள் :      

1. பாமினி சுல்தான்களின் ஆட்சியை அறிந்து கொண்டனர்.

2. விஜயநகர அரசர்களின் ஆட்சியை புரிந்து கொண்டனர்.

3. பக்தி இயக்கம், சூஃபி இயக்கம் உணர்ந்து கொண்டனர்.

4. பக்தி இயக்க சீர்திருத்தவாதிகளை தெரிந்து கொண்டனர்.

தொடர்பணி :       

1. முதலாம் முகமது ஆட்சியின் கீழ் பாமினி அரசு பற்றிக் குறிப்பு வரைக.

2. முகமது கவானின் ஆட்சிமுறை மற்றும் ராணுவ நிர்வாகம் பற்றி விவரி.

3. சூபியிஸத்தின் தாக்கம் பற்றி விவரி.

4. பக்தி இயக்கத்தின் சிறப்பியல்புகளை வரிசைப்படுத்துக.


அ. அறிவழகன், மாநிலத் தலைவர் 

தமிழ்நாடு முதுகலை வரலாறு ஆசிரியர் கழகம் - 9944573722   

Download Pdf Link 👇👇👇

11th History - Notes of Lesson - Week 9








No comments:

Post a Comment