Home

06 November 2023

11 ஆம் வகுப்பு வரலாறு - பாடக்குறிப்பேடு - வாரம் 6

11 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 8, 9

தேதி  :       

வகுப்பு  11 ஆம் வகுப்பு      

பாடம்  : வரலாறு     

தலைப்பு  : 8. ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி                    9. தென்னிந்திாவில் பண்பாட்டு வளர்ச்சி  

கற்பித்தல் துணைக் கருவிகள் :       

திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.  

கற்பித்தல் நோக்கங்கள் :       

1. ஹர்ஷரின் ஆட்சி நிர்வாகம், மதக் கொள்கையை அறியச் செய்தல்.

2. பாலர்கள் மற்றும் இராஷ்டிரகூடர்களின் சிறப்பை புரியச் செய்தல்.

3. பல்லவ - சாளுக்கிய மோதல்களின் இயல்பை உணரச் செய்தல்.

4. தமிழ் பக்தி இயக்கத்தின் தோற்றத்தை பற்றி விளங்கச் செய்தல்.     

ஆயத்தம் செய்தல் :      

1. யாருடைய ஆட்சி பொற்காலம் எனப்படுகிறது?

2. பௌத்த மதத்தை ஆதரித்த அரசர்கள் யார்?

3. மாமல்லபுரம் சிற்பங்களை செதுக்கியது யார்?

4. பக்தி - முக்தி இரண்டின் பொருள் என்ன?    

பாடக் குறிப்புகள் :      

 குப்தர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் வட இந்தியா பல சிற்றரசுகளாகச் சிதறுண்டது. கன்னோசியில் வர்த்தனர்கள், வங்காளத்தில் பாலர்கள், மகாராஷ்டிரத்தில் இராஷ்டிரகூடர்கள் ஆட்சி நிறுவப்பட்டது. தென்னிந்தியாவில் சாளுக்கியர்கள், பல்லவர்கள் ஆட்சி தோன்றியது.

* ஹர்ஷர் கால இலக்கியங்கள், பட்டயங்கள், புஷ்யபூதிகள்

* ஹர்ஷரின் வட இந்திய படையெடுப்பு, இரண்டாம் புலிகேசியுடன் போர்,

* ஹர்ஷரின் சீன உறவு, நிர்வாகம், அமைச்சரவை, மதக் கொள்கை

* வங்காளத்தில் பாலர்கள் ஆட்சியின் தோற்றம்

* கோபாலர், தர்மபாலர், தேவபாலர், விக்ரமபாலர், மஹிபாலர்

* மகாயான பௌத்த மதம், விக்கிரமசீலா பல்கலைக்கழகம்

* இராஷ்டிரகூடர்களின் எழுச்சி - தந்திதுர்கர்

* முதலாம் கிருஷ்ணர், துருவர், மூன்றாம் கோவிந்தர், அமோகவர்ஷர்

* இராஷ்டிரகூடர்களின் மதம், இலக்கியம், கலை கட்டடக்கலை   

* சாளுக்கியர்களின் எழுச்சி - முதலாம் புலிகேசி, 2ஆம் புலிகேசி

* சாளுக்கியர்களின் நிர்வாகம், அரசகுல மகளிர், மதம், இலக்கியம்

* சாளுக்கியர்களின் கட்டடக்கலை - ஐஹோல், வாதாபி, பட்டாடக்கல்

* பல்லவர்களின் எழுச்சி - சிம்ம விஷ்ணு, முதலாம் மகேந்திர வர்மன்

* முதலாம் நரசிம்ம வர்மன், முதலாம் பரமேஸ்வர வர்மன், 3ஆம் நந்தி வர்மன்

* பல்லவர்களின் நிர்வாகம், நிலமானியங்கள், ஏரி நீர்ப்பாசனம்

* பல்லவர்களின் கடல்வழி வணிகம், குடைவரைக் கோவில்கள்

* அஜந்தா - எல்லோரா - மாமல்லபுரம் கோவில்கள்

* தமிழ் பக்தி இயக்கம் - ஆழ்வார்கள், நாயன்மார்கள் - ஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர்

மதிப்பிடுதல் :      

1. ஹர்ஷ சரிதம் என்ற நூலை எழுதியவர் யார்?

2. தர்மபாலர் நிறுவிய பல்கலைக்கழகம் எது?

3. பல்லவர்களின் தலைநகரமாக எது இருந்தது?

4. ஆதிசங்கரர் எடுத்துரைத்த கோட்பாடு யாது?   

கற்றல் விளைவுகள் :      

1. ஹர்ஷரின் ஆட்சி நிர்வாகம், மதக் கொள்கையை அறிந்து கொண்டனர்.

2. பாலர்கள் மற்றும் இராஷ்டிரகூடர்களின் சிறப்பை புரிந்து கொண்டனர். 

3. பல்லவ - சாளுக்கிய மோதல்களின் இயல்பை உணர்ந்து கொண்டனர்.

4. தமிழ் பக்தி இயக்கத்தின் தோற்றத்தை பற்றி தெரிந்து கொண்டனர்.     

தொடர்பணி :       

1. ஹர்ஷரின் சமயக் கொள்கை பற்றி விளக்கம் தருக.

2. வட இந்தியா குறித்து யுவான் சுவாங் கருத்தை விவாதி.

3. மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலின் மேன்மையை விவரி.   


அ. அறிவழகன், மாநிலத் தலைவர் 

தமிழ்நாடு முதுகலை வரலாறு ஆசிரியர் கழகம் - 9944573722   

Download Pdf Link 👇👇👇

11th History - Notes of Lesson - Week 6







No comments:

Post a Comment