Home

06 November 2023

11 ஆம் வகுப்பு வரலாறு - பாடக்குறிப்பேடு - வாரம் 4

11 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 5, 6

தேதி  :       

குப்பு  11 ஆம் வகுப்பு      

பாடம்  : வரலாறு     

தலைப்பு  : 5. தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம். 6. மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்.   

கற்பித்தல் துணைக் கருவிகள் :       

திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.  

கற்பித்தல் நோக்கங்கள் :       

1. சாதவாகனர்களின் ஆட்சியை பற்றி அறியச் செய்தல்.

2. சங்ககால அரசியல், சமுதாய மாற்றத்தை புரியச் செய்தல்.

3. இந்தியா, மத்திய ஆசியா இடையிலான தொடர்பை உணரச் செய்தல்.

4. இந்தியாவில் கிரேக்கர்களின் பண்பாட்டுத் தாக்கத்தை விளங்கச் செய்தல்.    

ஆயத்தம் செய்தல் :      

1. அசோகரின் எல்லையோர அரசுகள் யாவை?

2. சங்க கால இலக்கியங்கள் என்பன எவை?

3. இந்தியா மீது படையெடுத்த கிரேக்க அரசர் யார்?

4. செலியுகஸ் நிகேடர் யாருடன் போரிட்டார்?      

பாடக் குறிப்புகள் :      

தக்காணப் பகுதியில் பொ.ஆ.மு முதல் நூற்றாண்டில் சாதவாகனர்கள் ஒரு வலுவான அரசை நிறுவினார்கள். பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டு முதலே தமிழகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்து வந்தானர். பிறகு களப்பிரர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். வட இந்தியாவில் மௌரியப் பேரரசு வீழ்ச்சியடைந்த பிறகு அடுத்த நான்கு நூற்றாண்டுகளில் மேற்கு மற்றும் மத்திய ஆசியாவைச் சேர்ந்த இந்தோ-கிரேக்கர், சாகர், குஷாணர் ஆகியோர் படை டையெடுத்தனர்.

* தென்னிந்திய சான்றுகள், தமிழ் செவ்வியல் இலக்கியம்.

* மௌரியர் காலத்து தென்னிந்தியா - சாதவாகனர்கள்,

* மூவேந்தர்கள் ஆட்சி - சேரர், சோழர், பாண்டியர்.

* தமிழ் திணைப் பகுதிகளில் சமுதாய உருவாக்கம்.

* தமிழ் அரசமைப்பு, குடிமைத் தலைமை முறை.

* கிழார்கள், வேளிர்கள், வேந்தர்களின் எழுச்சி.

* சங்க கால சமூகம், பொருளாதாரம், வாணிபம்.   

களப்பிரர்கள் காலம் - சங்கம் மருவிய காலம்.

* இந்தோ-கிரேக்க உறவுகளின் தொடக்கம்.

* இந்தோ-கிரேக்கர் - செலியுகஸ், டெமிட்ரியஸ், மினாண்டர்.

* சாகர்கள் ஆட்சி - ருத்ரதாமன், பார்த்தியர்கள் படையெடுப்பு.

* குஷாணர்கள் ஆட்சி - கனிஷ்கர், காந்தாரக் கலை,

* பன்னாட்டு வணிகத்தின் வரையறைகள்.

* மத்திய தரைக்கடல் உலகின் வல்லரசாக ரோம்

* முசிறி பாப்பிரஸ் ஆவணம்.

* தமிழகம் - ரோம் இடையிலான வணிகம்

* அயல்நாட்டு வணிகர்கள் - யவனர்கள்.

* வணிகமும் பொருளாதாரமும் - விரிவான விவரங்கள்.

மதிப்பிடுதல் :      

1. நாசிக் கல்வெட்டு யாரைப் பற்றி கூறுகிறது?

2. காவிரியின் குறுக்கே கல்லணை கட்டியவர் யார்?

3. காந்தாரக் கலை பாணி என்றால் என்ன?

4. ரோமானிய நாணயங்கள் எங்கு கிடைத்துள்ளது?     

கற்றல் விளைவுகள் :      

1. சாதவாகனர்களின் ஆட்சியை பற்றி அறிந்து கொண்டனர்.

2. சங்ககால அரசியல், சமுதாய மாற்றத்தை புரிந்து கொண்டனர்.

3. இந்தியா, மத்திய ஆசியா இடையிலான தொடர்பை உணர்ந்து கொண்டனர்.

4. இந்தியாவில் கிரேக்கர்களின் பண்பாட்டுத் தாக்கத்தை தெரிந்து கொண்டனர்.      

தொடர்பணி :       

1. மூவேந்தர்களின் நிர்வாக அமைப்பை விவரிக்க.

2. பூலாங்குறிச்சி கல்வெட்டுகள் குறிப்பிடும் செய்திகளை ஆராய்க.

3. கலைக்கும் இலக்கியத்துக்குமான கனிஷ்கரின் பங்களிப்பை விவரி.     


அ. அறிவழகன், மாநிலத் தலைவர் 

தமிழ்நாடு முதுகலை வரலாறு ஆசிரியர் கழகம் - 9944573722   

Download Pdf Link 👇👇👇

11th History - Notes of Lesson - Week 4








No comments:

Post a Comment