Home

06 November 2023

11 ஆம் வகுப்பு வரலாறு - பாடக்குறிப்பேடு - வாரம் 2

11 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 2, 3

தேதி          :        

வகுப்பு      : 11 ஆம் வகுப்பு      

பாடம்         : வரலாறு     

தலைப்பு  : 2. பண்டைய இந்தியா : செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால,  வேதகாலப் பண்பாடுகள்,  3. பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் 

கற்பித்தல் துணைக் கருவிகள் : 

திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.

கற்பித்தல் நோக்கங்கள் : 

1. செம்புக்காலம், பெருங்கற்காலம், இரும்புக்காலம் பற்றி அறியச் செய்தல்.

2. வேதகாலச் சமூகங்களின் தனித் தன்மைகளை புரியச் செய்தல்.

3. மகாஜனபதங்களின் தோற்றத்தை உணரச் செய்தல்.

4. அவைதீக மதக் கோட்பாடுகளை விளங்கச் செய்தல்.

ஆயத்தம் செய்தல் : 

1. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை எவ்வாறு பிரிக்கலாம் ?

2. மனிதன் முதன்முதலில் கண்டறிந்த உலோகம் எது ?

3. இந்தியாவில் உள்ள மதங்களின் பெயர்களை கூறுக.

பாடக் குறிப்புகள் : 

பொ.ஆ.மு. 1900 காலகட்டத்தில் சிந்து நாகரிகம் மறைந்ததைத் தொடர்ந்து இந்திய வரலாறு புதிய கற்காலம், செம்புக்காலம், பெருங்கற்காலம், இரும்புக்காலம், வேதகாலம் ஆகிய பண்பாடுகள் தோன்றின. காடுகளை திருத்துவதில் இரும்பு முக்கிய பங்காற்றியது. 16 மகாஜன பதங்கள் உருவாயின. பல அவைதீக மதங்கள் தோன்றி வளர்ந்தன. 

* ஆரியருக்கு முந்தைய, ஹரப்பாவிற்கு பிந்தைய செம்புக்கால பண்பாடுகள். 

* பழுப்பு மஞ்சள்நிற மட்பாண்டப் பண்பாடு. 

* தென் இந்தியச் செம்புக்காலப் பண்பாடுகள். 

* வட இந்தியாவில் இரும்புக்காலம், தமிழகத்தில் பெருங்கற்காலம் 

* ஆதிச்சநல்லூர், பையம்பள்ளி, கொடுமணல். 

* வேதகால இலக்கியங்கள், தாசர்களும் தசயுக்களும். 

* ரிக் வேதகாலப் பண்பாடு - சமூகம், பொருளாதாரம், அரசியல், மதம். 

* பிற்கால வேதப் பண்பாடு - சமூகம், பொருளாதாரம், அரசியல், மதம். 

* இரண்டாவது நகரமயமாக்கம், பதினாறு மகாஜன பதங்கள். 

* அறிவு மலர்ச்சிக்கான காரணங்கள். 

* அவைதீக மதங்கள் - ஆசீவகம், சமணம், பௌத்தம். 

* லோகாயதமும் சார்வாகமும் - அவைதீக மதங்களிடையே மோதல். 

* சமணம் - மகாவீரரின் வாழ்க்கை, போதனைகள். 

* சமணத் தத்துவங்கள் - மும்மணிகள். 

* சமணமத சங்கங்கள், சமணத்தில் ஏற்பட்ட பிளவுகள். 

* பௌத்தம் - புத்தரின் வாழ்க்கை, போதனைகள். 

* புத்தரின் நான்கு பேருண்மைகள், எண்வழிப் பாதை. 

* பௌத்த சங்கங்கள், பௌத்தமத பிரிவுகள், பௌத்தத்தின் வீழ்ச்சி. 

* தமிழ்நாட்டில் சமணமும் பௌத்தமும் செலுத்திய செல்வாக்கு. 

மதிப்பிடுதல் : 

1. பெருங்கற்காலம் என்றால் என்ன ? 

2. வேதகால இலக்கியங்களைப் பட்டியலிடுக. 

3. பதினாறு மகாஜன பதங்களில் வலிமையானது எது ? 

4. மகாவீரரின் போதனைகளின் மையக்கருத்து யாது? 

கற்றல் விளைவுகள் : 

1. செம்புக்காலம், பெருங்கற்காலம், இரும்புக்காலம் பற்றி அறிந்து கொண்டனர். 

2. வேதகாலச் சமூகங்களின் தனித் தன்மைகளை புரிந்து கொண்டனர். 

3. மகாஜனபதங்களின் தோற்றத்தை உணர்ந்து கொண்டனர். 

4. அவைதீக மதக் கோட்பாடுகளை தெரிந்து கொண்டனர். 

தொடர்பணி : 

1. தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய்விடங்களை விவாதிக்க. 

2. வேதகால அரசியல் மற்றும் நிர்வாகம் குறித்து விவரிக்க. 

3. புத்தரின் எண்வழிப் பாதையை விளக்குக. 


அ. அறிவழகன், மாநிலத் தலைவர், 

தமிழ்நாடு முதுகலை வரலாறு ஆசிரியர் கழகம் - 9944573722

Download Pdf Link 👇👇👇

11th History - Notes of Lesson - Week 2







No comments:

Post a Comment