11 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 15
தேதி :
வகுப்பு : 11 ஆம் வகுப்பு
பாடம் : வரலாறு
தலைப்பு : 15. மராத்தியர்
கற்பித்தல் துணைக் கருவிகள் :
திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.
கற்பித்தல் நோக்கங்கள் :
1. மராத்தியரின் எழுச்சிக்கான காரணங்களை அறியச் செய்தல்.
2. சிவாஜியின் படையெடுப்புகள், நிர்வாகத்தை புரியச் செய்தல்.
3. பேஷ்வாக்களின் ஆட்சி, நிர்வாகத்தை உணரச் செய்தல்.
4. தமிழகத்தில் மராத்தியர்கள் ஆட்சியை விளங்கச் செய்தல்.
ஆயத்தம் செய்தல் :
1. மலை எலி என ஒளரங்கசீப் யாரை அழைத்தார்?
2. பக்தி இயக்க துறவி துக்காராம் எங்கு வாழ்ந்தார்?
3. தமிழகத்தில் மராட்டியர் ஆட்சி செய்த பகுதி எது?
பாடக் குறிப்புகள் :
முகலாயரின் வீழ்ச்சியில் மராத்தியர் முக்கியப் பங்கு வகித்தனர். 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் மராத்திய மன்னர் சிவாஜியின் தலைமையில் முகலாய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதில் வெற்றி பெற்றனர். தஞ்சாவூரில் மராத்தியத் தளபதி வெங்கோஜியின் தலைமையில் மராத்திய ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
* மராத்தியர்களின் எழுச்சிக்கான காரணங்கள்
* மக்களின் இயல்பு, புவியியல் கூறுகள், பக்தி இயக்கம்
* சிவாஜியின் பிறப்பு, எழுச்சி, படையெடுப்புகள்
* சிவாஜி மற்றும் பீஜப்பூர் - அப்சல் கான் தோல்வி
* ஜெய்சிங், புரந்தர் உடன்படிக்கை, ஆக்ரா பயணம்
* முகலாயருடன் மோதல், சிவாஜி அரியணை ஏறுதல்
* சிவாஜியின் ஆட்சி நிர்வாகம், அஷ்டபிரதான், இராணுவம்
* சிவாஜிக்கு பிறகு மராத்தியர், சாம்பாஜி, ராஜாராம், தாராபாய்
* பேஷ்வா ஆட்சி - பாலாஜி விஸ்வநாத், முதலாம் பாஜிராவ்
* பாலாஜி பாஜிராவ், உத்கிர் போர், மூன்றாம் பானிப்பட் போர்
* பேஷ்வா முதலாம் மாதவராவ், அவரது வழிதோன்றல்கள்
* முதலாம் ஆங்கில மராத்திய போர் - சால்பை உடன்படிக்கை
* பேசின் ஒப்பந்தம், இரண்டாம் ஆங்கில மராத்தியப் போர்
* பூனா ஒப்பந்தம், மூன்றாம் ஆங்கில மராத்தியப் போர்
* பேஷ்வாக்களின் கீழ் மராத்திய நிர்வாகம், வருவாய்கள்
* தமிழகத்தில் மராத்தியரின் ஆட்சி, தஞ்சை நாயக்கர் வீழ்ச்சி
* தஞ்சை நாயக்கர் ஆட்சி - வெங்கோஜி, ராஜா தேசிங்கு
* தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம், இரண்டாம் சரபோஜி
மதிப்பிடுதல் :
1. புரந்தர் உடன்படிக்கையின் ஷரத்துகள் யாவை?
2. மூன்றாம் பானிப்பட் போரின் விளைவுகள் என்ன?
3. தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் பற்றி கூறுக.
கற்றல் விளைவுகள் :
1. மராத்தியரின் எழுச்சிக்கான காரணங்களை அறிந்து கொண்டனர்.
2. சிவாஜியின் படையெடுப்புகள், நிர்வாகத்தை புரிந்து கொண்டனர்.
3. பேஷ்வாக்களின் ஆட்சி, நிர்வாகத்தை உணர்ந்து கொண்டனர்.
4. தமிழகத்தில் மராத்தியர்கள் ஆட்சியை தெரிந்து கொண்டனர்.
தொடர்பணி :
1.சிவாஜியின் இராணுவ அமைப்பு அவரது வெற்றிக்கு எவ்வாறு வழிவகுத்தது?
2. முதலாம் பாஜிராவ் வாழ்க்கை, சாதனைகளை பற்றி விவாதிக்கவும்.
3. நவீன கல்விமுறைக்கு இரண்டாம் சரபோஜியின் பங்கினை விளக்குக.
அ. அறிவழகன், மாநிலத் தலைவர்
தமிழ்நாடு முதுகலை வரலாறு ஆசிரியர் கழகம் - 9944573722
Download Pdf Link 👇👇👇
11th History - Notes of Lesson - Week 11
No comments:
Post a Comment