Home

18 October 2023

பாமினி பேரரசு - பகுதி 5

பாமினி பேரரசு

அலாவுதீன் ஹுமாயூன் : (1458 - 1461) 

இரண்டாம் அலாவுதீன் அகமதுவின் மூத்த மகன் - அலாவுதீன் ஹுமாயூன். 

இரண்டாம் அலாவுதீன் அகமதுவிற்கு பிறகு அலாவுதீன் ஹுமாயூன் அரியணை ஏறினார். 

சிலர் ஹுமாயூனின் இளைய சகோதரன் ஹாசனை அரியணையில் அமர்த்தினார்கள். 

ஹாசனை அரியணையில் இருந்து இறக்கிய ஹுமாயூன் அவரை குருடாக்கினார். 

ஹாசனை அரியணையில் ஏற்றிட யூசுஃப் துருக் என்ற அடிமை முயன்றார். 

பீஜப்பூர் கவர்னர் ஹாசனை பிடித்து பாமினி சுல்தானிடம் ஒப்படைத்தார். 

பசியோடு வாடிய புலிக்கு ஹாசன் இரையாக்கப்பட்டார். 

ஹாசனின் ஆதரவாளர்கள் சிலர் கொடிய விலங்குக்கு இரையாயினர். சிலர் கொதிக்கும் எண்ணைக்குள் வீசப்பட்டனர். 

நளகொண்டா ஆளுநர் ஜலால்கான் ஹுமாயூனுக்கு எதிராகவும் கலகம் செய்தார். 

ஜலால்கான் மகன் சிக்கந்தர் பாமினி அரசை இரண்டாக பிரிக்க வேண்டும் என வற்புறுத்தினான். 

போரின் போது குதிரையில் இருந்து கீழே விழுந்த சிக்கந்தர் சுல்தானுடைய யானைகளின் கால்களில் மிதிபட்டு இறந்தான். 

அலாவுதீன் ஹுமாயூன் 1461 இல் இறந்தார். 

பாமினி சுல்தான் ஹுமாயூன் இறந்த நாளை உலகத்தின் மகிழ்ச்சி எனப் பாடியவர் - நஸீர். 

ஹுமாயூனை ஜாலிம் அல்லது கொடுமையாளர் என பெரிஷ்டா கூறுகிறார். 

ஹுமாயூன் ஒரு நல்ல அரசர், கொடுமையாளர் அல்ல என முகமது கவான் எழுதிய ரியாஸுல் இன்ஷா கூறுகிறது. 

தக்காண வரலாற்றில் ஹுமாயூன் புரிந்து கொள்ள முடியாத ஒரு புதிராக விளங்குகிறார் என ஷெர்வானி கூறுகிறார். 

பயங்கர கொடுமையின் சின்னமாகிய நீரோ மற்றும் காலிகூலா போன்றவரின் மறுபிறப்பே ஹுமாயூன் என ஈஸ்வரி பிரசாத் கூறுகிறார். 

ஹுமாயூன் கலகக்காரர்களின் உதடுகளை கடித்து கொடுமைப்படுத்தினார், 2000 நகரப் பாதுகாவலர்களை தூக்கிலிட உத்தரவிட்டார் என வி. ஏ. ஸ்மித் கூறுகிறார். 

உள்நாட்டு குழப்பம், சூழ்ச்சி, நம்பிக்கையின்மை ஆகியவையே ஹுமாயூனை கொடுங்கோலனாக மாற்றி, அவரது புகழை மங்கச் செய்தன என ஷெர்வானி கூறுகிறார். 

நிஜாம் ஷா : (1461 - 1463) 

ஹுமாயூனின் 8 வயது மகன் நிஜாம் ஷா 1463 இல் அரியணை ஏறினார். 

நிஜாம் ஷாவின் பட்டப்பெயர் - மூன்றாம் நிஜாமுதீன் அகமது. 

நிஜாம் ஷாவின் தாய் - சுல்தானா மக்துமா ஜஹான். 

ஆட்சி அதிகாரம் - சுல்தானா மக்துமா ஜஹான், குவாஜா ஜஹான், மாமூது கவான் ஆகியோர் அடங்கிய மூவர் குழுவிடம் இருந்தது. 

ஒரிசா, தெலுங்கானா படைகளின் தாக்குதலை முறியடித்தவர் - குவாஜா ஜஹான். 

மாளவ அரசர் முதலாம் முகமது கில்ஜி பாமினி தலைநகர் பீடாரைத் தாக்கினார். 

சுல்தானா மக்துமா ஜஹான் குஜராத் அரசர் முகமது பெகராவின் உதவியை நாடினார். 

குஜராத் படையை கண்டு மாளவ அரசர் முதலாம் முகமது கில்ஜி தனது நாட்டிற்கு திருப்பினார். 

மாளவ அரசர் முதலாம் முகமது கில்ஜி 1462 இல் மீண்டும் பாமினி அரசை தாக்க முயன்றார். 

1463 இல் நிஜாம் ஷா திடீரென இறந்தார். 

மூன்றாம் முகமது ஷா : (1463 - 1482) 

நிஜாம் ஷாவின் 9 வயது சகோதரர் முகமது ஷா 1463 இல் அரியணை ஏறினார். 

பட்டப்பெயர் - மூன்றாம் ஷம்சுதீன் முகமது ஷா. 

ஆட்சி அதிகாரம் - மூவர் குழுவிடம் இருந்தது. 

பொதுப் பணத்தை கையாடல் செய்த குவாஜா ஜஹான் அரசவையிலேயே கொல்லப்பட்டார். 

குவாஜா ஜஹான் வகித்து வந்த பதவி மாமூத் கவானுக்கு வழங்கப்பட்டது. 

மாமூத் கவானின் பதவி - வக்கீல் உஸ் சல்தனத் (பிரதம அமைச்சர்). 

மூன்றாம் முகமது 1464 இல் திருமணம் செய்து கொண்டவுடன் சுல்தானா மக்துமா ஜஹான் ஆட்சி அதிகாரத்தில் இருந்த விலகிக் கொண்டார். 

சுல்தானா மக்துமா ஜஹான் இடைக்கால அரச குலத்தில் தோன்றிய சிறந்த பெண்மணிகளில் ஒருவராக உள்ளார். 

மாமூத் கவான் பாமி அரசின் புகழ் அதன் உன்னத நிலையை அடையுமாறு செய்தார் என ஷெர்வானி கூறுகிறார். 

மாமூத் கவான் அளவில்லா அதிகாரம் பெற்றிருந்த போதிலும் நாட்டின் முன்னேற்றத்துக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தார் என ஈஸ்வரி பிரசாத் கூறுகிறார். 

மூன்றாம் முகமது ஷாவின் காலம் - மாமூத் கவானின் காலம் என்று அழைக்கப்படுகிறது. 

மாமூத் கவான் ஆளுநர் பதவிகளை தக்காண முஸ்லிம்கள், அன்னிய முஸ்லிம்கள் என இருவருக்கும் சமமாக பிரித்துக் கொடுத்தார். 

குல்பர்கா, தௌலதாபாத் ஆளுநர்கள் - மாமூத் கவான், யூசுப் அடில்கான் (அன்னிய முஸ்லிம்கள்) 

பீரார், தெலுங்கானா ஆளுநர்கள் - மாலிக் ஹாசன், இமாத் உல் முல்க் (தக்காண முஸ்லிம்கள்) 

மாமூத் கவானின் முதல் எதிரியாக இருந்தவர் - மாலிக் ஹாசன் (தக்காண முஸ்லிம்) 

மாளவ அரசர் முதலாம் முகமது கில்ஜி - எலிச்பூர், மாகூர் பகுதிகள் மீது உரிமை கொண்டாடினார். 

மாளவ அரசர் கெர்லா பகுதியை இணைத்துக் கொண்டு மாமூதாபாத் என்று பெயர் சூட்டினார். 

நிஜாம் உல் முல்க் தலைமையிலான பாமினிப் படையிடம் மாளவப் படைகள் தோல்வியுற்றன. 

ஒரிசா அரசர் கபிலேஸ்வரர் இறந்தவுடன் மங்கள்ராய் - அம்வீரர் இடையே வாரிசுரிமை போர். 

அம்வீரர் பாமினி சுல்தான் மூன்றாம் முகமது ஷாவின் உதவியை நாடினார். 

பாமினி படைத் தளபதி மாலிக் ஹாசன் பாரி, அம்வீரரை அரசனாகினார். 

மாலிக் ஹாசன் பாரி இராஜ மகேந்திரத்தைக் கைப்பற்றினார். 

மூன்றாம் முகமது ஷா, மாலிக் ஹாசன் பாரிக்கு நிஜாம் உல் முல்க் பட்டம் வழங்கினார். 

கெல்னா அரசரும், சங்கமேஸ்வர அரசரும் பாமினி கப்பல்களை அரபிக் கடலில் சூறையாடினர். 

மாமூத் கவான் முதல் படையெடுப்பில் ஹூப்ளி நகரை சூறையாடினார். 

மாமூத் கவான் அமைத்த இராணுவ மையம் - கோலாப்பூர். 

மாமூத் கவான் இரண்டாவது படையெடுப்பில் ரெங்னாக், மச்சேல் கோட்டைகளை பிடித்தார். 

மாமூத் கவான் 1472 இல் கோவா தீவைக் கைப்பற்றினார். 

மூன்றாம் முகமது ஷா 1481 இல் காஞ்சிபுரத்தை தாக்கி கொள்ளையடித்தார். 

மூன்றாம் முகமது ஷாவுடன் நிஜாம் உல் முல்க், யூசுப் கான் காஞ்சிபுரம் வந்தனர். 

1470 இல் ரஷ்ய நாட்டுப் பயணி நிக்கேடின் பாமினி தலைநகரம் பீடாருக்கு வருகை தந்தார். 

1447 முதல் 1474 வரை நிக்கேடின் பாமினி பேரரசில் சுற்றுப்பயணம் செய்து வந்தார். 

நிகோடின் - சுல்தான் 20 வயதுடைய சிறிய ஆள். கோராசான்கள் நாட்டை ஆள்கின்றனர். 

பாமினி சுல்தானின் அரண்மனையில் ஏழு நுழைவுவாயில்கள் இருந்தன. ஒவ்வொரு வாயிலிலும் நூறூ பாதுகாவலர்கள், 100 முஸ்லிம் எழுத்தர்கள் இருந்தனர் என நிக்கேடின் கூறுகிறார். 

மாமூத் கவான் : 

மாமூத் கவான் - 1404 இல் பாரசீகத்தில் உள்ள கவான் எனும் ஊரில் பிறந்தார். 

மாமூத் கவான் - 1447 இல் இந்தியா வந்தடைந்தார். 

மாமூத் கவானை, பாமினி சுல்தான் இரண்டாம் அலாவுதீன் அகமது பிரபுவாக நியமித்தார். 

மாமூத் கவானுக்கு மாலிக் உல் துஜ்ஜார் என்ற பட்டத்தை சுல்தான் ஹுமாயூன் வழங்கினார். 

மூன்றாம் முகமது ஷா காலத்தில் மாமூத் கவான் பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டார். 

கெல்னா, பெல்காம், கோவா, இராஜ மகேந்திரம், கொண்டவீடு பகுதிகளை கைப்பற்றினார். 

மாமூத் கவான் மாகாண ஆளுநர்களின் அதிகாரங்களை குறைத்தார். 

மாமூத் கவான் ஒவ்வொரு மாநிலத்தையும் இரண்டு கூறுகளாக பிரித்தார். 

மாமூத் கவான் - இராணுவத் துறையை மாற்றி அமைத்தார். 

மாமூத் கவானின் நிதி நிர்வாகம் ராஜா தோடர்மால், மாலிக் ஆம்பர் வழியில் இருந்தது என சத்தியநாதய்யர் கூறுகிறார். 

இராணுவ அதிகாரிகளின் ஊதியம் குறைத்தார். போர் வீரர்களின் ஊதியம் உயர்த்தினாரா. 

மாமூத் கவான் - பீடாரில் ஒரு கல்லூரியை நிறுவியதோடு, அதனுள் நூலகம் ஒன்றும், காட்சிசாலை ஒன்றும் அமைத்தார். 

மாமூத் கவான் - எகிப்து, ஜிலான், கான்ஸ்டாண்டிநோபிள் ஆகிய நாடுகளின் அரசர்களுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். 

மாமூத் கவான் எழுதிய நூல்கள் - 1. ரௌஸத் உல் இன்ஷா, 2. திவானி அஸிர். 

மாமூத் கவான் தனது சொந்த நூலகத்தில் 3000 நூல்களை வைத்திருந்தார். 

ஜலாலுதீன் தாவாணி தனது சிறப்பான நூல்களை மாமூத் கவானுக்கு பரிசளித்தார். 

மாமூத் கவான் சுல்தானுக்கு எதிராக சதி செய்வது போல் போலி கடிதம் தயாரித்தவர் - மாலிக் ஹாசன். 

விஜயநகர அரசரை பீடாரைத் தாக்க வருமாறு மாமூத் கவான் முத்திரையிட்ட போலி கடிதம் சுல்தானிடம் தரப்பட்டது. 

மது போதையில் இருந்த மூன்றாம் முகமது ஷா, மாமூத் கவானின் தலையை துண்டிக்குமாறு உத்தரவிட்டார். 

மாமூத் கவானின் தலையை ஆப்பிரிக்க அடிமை ஜௌஹர் வெட்டி வீழ்த்தினான். 

1481 ஏப்ரல் 5 ஆம் நாள் மாமூத் கவான் கொல்லப்பட்டார். 

மாமூத் கவானின் மரணம் பாமினி அரசின் ஆட்சியை சீர்குலையச் செய்தது. 

மாமூத் கவானின் மரணம் பாமினி அரசுக்கு சாவு மணி அடித்ததாக கூறப்படுகிறது. 

மாமூத் கவான் இடைக்கால வரலாற்றில் இராஜதந்திரம் மிக்கவர்களில் சிறப்பான இடத்தைப் பெறுகிறார் என ஈஸ்வரி பிரசாத் கூறுகிறார். 

மாமூத் கவானின் பதவியில் மாலிக் ஹாசன் நியமிக்கப்பட்டார். 

1482 மார்ச் 22 இல் மூன்றாம் முகமது ஷா இறந்தார். 

மூன்றாம் முகமது ஷாவுக்குப் பிறகு பாமினி அரசு வீழ்ச்சியடையத் தொடங்கியது. 

ஷகாபுதீன் மாமூத் ஷா : (1482 - 1518) 

சுல்தான் ஷகாபுதீன் மாமூத் ஷா 12 வயது நிரம்பிய சிறுவன். 

பாமினி அரசின் 14 ஆவது சுல்தான் - ஷகாபுதீன் மாமூத் ஷா. 

ஆட்சி அதிகாரம் - நிஜாம் - உல் - முல்க், இமாத் - உல் - முல்க், அமீர் ஜும்லா வசம் இருந்தது. 

காசீம் பரீத் - தலைநகரின் கொத்வால் / காவல்துறை அதிகாரி

நிஜாம் உல் முல்க் - காசீம் பரீத் இடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டது. 

நிஜாம் உல் முல்க் - பீடாரின் அபிசீனிய ஆளுநரால் கொல்லப்பட்டார். 

இமாது உல் முல்க் பீரார் பகுதிக்கு தப்பிச் சென்றுவிட்டார். 

ஷெர்வானி - 1518 இல் ஷகாபுதீன் மாமூத் ஷா மறைவுடன் பாமினி அரசின் வரலாறு முடிந்தது. 

நான்காம் அகமது (1518 - 1520) 

அலாவுதீன் ஷா (1520 - 1523) 

வலியுல்லா (1523 - 1526) 

கலிமுல்லா (1526 - 1538) 

Part 4

Part 6

அ. அறிவழகன், முதுகலை ஆசிரியர், 9944573722




No comments:

Post a Comment