Home

02 October 2023

பாமினி பேரரசு - பகுதி 1

பாமினி பேரரசு

பாமினி அரசு உதயம் : 

கோஹினூர் வைரம் - கோல்கொண்டா சுரங்கத்தில் கிடைத்தது. 

தக்காணம் - பொன் வயல் என கருதப்பட்டது. 

முகமது பின் துக்ளக் ஆட்சி காலம் - கி.பி. 1325 - 1351 

முகமது பின் துக்ளக் தலைநகர் மாற்றம் - தேவகிரி (1327) 

தேவகிரி வேறு பெயர் - தௌலதாபாத் 

தௌலதாபாத் பொருள் - செல்வம் கொழிக்கும் நகரம் 

தேவகிரி (தௌலதாபாத்) ஆளுநர் - குட்லுக் கான் 

முகமது பின் துக்ளக் வெளிநாட்டவர்களை அமீர்களாக நியமித்தார். 

அமீர்களின் பணி - நூறு போர் வீரர்களை பராமரிப்பது, வரி வசூலிப்பது. 

அமீர்கள் அனுப்பிய வரித் தொகை குறைவாக இருந்ததால் முகமது பின் துக்ளக் அவர்களை தண்டிக்க நினைத்தார். 

தௌலதாபாத் ஆளுநர் அமீர்களை புரோச் நகருக்கு அனுப்பி வைத்தார். 

அமீரன் இ சதா - தக்காணத்தின் அமீர்கள் கலகத்தில் ஈடுபட்டனர். 

இஸ்மாயில் முக் - 1346 இல் தக்காண சுல்தான் என முடிசூட்டிக் கொண்டார். 

இஸ்மாயில் முக் பட்டப்பெயர் - நசீருதீன் ஷா 

இஸ்மாயில் முக் - ஒரு வயோதிகர். அமைதி வேண்டி பதவி விலகினார். 

1347 இல் ஹசன் கங்கு தௌலதாபாத்தில் முடிசூட்டிக் கொண்டார். 

இஸ்மாயில் முக் - அமீர் உல் உம்ரா என்ற பதவியை பெற்றார். 

இஸ்மாயில் முக் சுல்தானின் இருக்கைக்கு அருகில் இடதுபுறம் அமர்ந்திருந்தார். 


அலாவுதீன் ஹசன் கங்கு பாமன் ஷா : (1347 - 1358)  

அலாவுதீன் ஹசன் கங்கு 1290 இல் பிறந்தார். 

ஹசன் கங்குவின் தந்தை பெயர் - கைகோஸ். 

குரு / எஜமான் - கங்கு பட்டர் என்ற பிராமண ஜோதிடர். 

கங்கு பட்டர் - முகமது பின் துக்ளக்கின் நம்பிக்கைக்குரியவர். 

கங்கு பட்டரின் நிலத்தை உழுத போது ஹசனுக்கு ஒரு செப்பு குடம் கிடைத்தது. 

தங்க காசுகள் அடங்கிய செப்பு குடத்தை கங்கு பட்டரிடம் கொடுத்தார். 

உள்ளம் நெகிழ்ந்த கங்கு பட்டர் ஹசனை முகமது பின் துக்ளக்கிடம் சேர்த்தார். 

100 குதிரை வீரர்கள் கொண்ட படைக்கு தளபதியாக ஹசன் நியமிக்கப்பட்டார். 

1347 இல் ஹசன் கங்கு, பாமினி சுல்தானியத்தை நிறுவினார். 

தனது குரு கங்கு பட்டரை நிதி அமைச்சராக நியமித்தார். 

பெரிஷ்டா - பாமினி என்பது கங்கு பட்டர் குலப் பெயரான பிராமணன் என்பதில் இருந்து வந்தது. 

புர்ஹான் இ மாசிர் - பாரசீக வீரர் பாமன் ஷா பெயரை இணைத்துக் கொண்டார். 

பாமன் ஷா - பாரசீக மன்னர் இசாபந்தியரின் மகன். 

1353 ஆம் ஆண்டு குல்பர்கா கல்வெட்டு - அலாவுதீன் அபுல் முசாபர் பாமன் ஷா 

செப்பு நாணயங்கள் - அகமது ஷா இபின் அகமது ஷா பின் பாமன் ஷா 

பிரதம அமைச்சர் - சைப்புதீன் கோரி பாமினி பேரரசின் முதுபெருங்கிழார் 

சைப்புதீன் கோரி மகளை ஹசன் கங்கு தனது மகனுக்கு மணம் முடித்தார். 

போச்சா ரெட்டியிடம் இருந்து குல்பர்கா கோட்டை கைப்பற்றப்பட்டது. 

குல்பர்கா கோட்டையை தாக்கியவர்கள் - குவாஜா ஜஹான், ஆஜாம் ஹூமாயூன், குதுப் உல் மாலிக். 

குல்பர்காவை தலைநகராக அறிவித்து அதற்கு அஸனாபாத் என பெயரிட்டார். 

காண்டேஷ் (காந்தார்) நாட்டை கைப்பற்ற உசேன் குர்ஷாப் என்பவரை அனுப்பினார். 

மகேந்திர நாடு (மாரான்), அகல்கோட் பகுதிகளை கைப்பற்ற குத்முல்க் என்பவரை அனுப்பினார். 

கைப்பற்றிய பகுதிகள் - கோவா, தாபோல், கோல்காபூர, தெலுங்கானா. 

ஹசன் கங்கு காலம் - பாமினி பேரரசின் எல்லைகள் 

1. வடக்கு - வைன் கங்கா / பென் கங்கா 

2. தெற்கு - கிருஷ்ணா நதி 

3. கிழக்கு - போங்கிர் 

4. மேற்கு - தௌலதாபாத் 

பாமினி பேரரசை நான்கு தாரப்புகளாக பிரித்தார். 

1. குல்பர்கா - சைப்புதீன் கோரி 

2. தௌலதாபாத் - மருமகன் முகமது 

3. பீரார் - சப்தர் கான் 

4. பாமினி - பீடார் - தெலுங்கானா - ஆஜாம் ஹூமாயூன் 

ஜிஸியா வரியை பெறாத முஸ்லிம் அரசர்களில் ஹசன் கங்குவும் ஒருவர் என ஷெர்வானி கூறுகிறார். 

சாகரில் கலகம் செய்த முகமது பின் ஆலமை மன்னித்தார். 

முத்தோல் நாட்டு இந்து தலைவர் நாராயணன் சுல்தானின் ஆட்சியின் கீழ் ஜமீன்தாராக மாறினார். 

இஸ்மாயில் முக், குர்கான் போன்ற சதிகார முஸ்லிம்களின் தலைகளை துண்டித்தார். 

இரண்டாம் அலெக்சாண்டர் - நாணயங்களில் பொறித்துக் கொண்டார். 

அலாவுதீன் ஹசன் கங்கு 1358 இல் இறந்தார். 

Part 2

அ. அறிவழகன், முதுகலை ஆசிரியர், 9944573722 




No comments:

Post a Comment