2021-22 ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் நடைபெறவுள்ள 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் தேதி அட்டவணையை மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்கள் இன்று காலை வெளியிட்டார்.
கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் கரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் மாணவர்களின் உயர்கல்வியை கருத்தில் கொண்டு இவ்வாண்டு தமிழகத்தில் திட்டமிட்டபடி பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வுக்கான தேதி வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment