முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்.5 ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அந்த விழாவின் போது தொடக்க , நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதான "டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது" வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் ரூ.10 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பதக்கம் ஆகியவை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2021-2022) மாநில நல்லாசிரியர் விருதுக்கு 385 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அர்களின் பெயர் பட்டியல் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment