Home

04 September 2021

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவது போன்றவற்றிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதேஇதைக் கருத்தில் கொண்டு வரி செலுத்துவோருக்கு ஏதுவாக, பல்வேறு படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை வருமான வரித் துறை நீட்டித்துள்ளது. இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

2020-2021 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தனிநபர்களுக்கு ஜூலை 31-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். கம்பெனிகளுக்கு அக்டோபர் 31 ஆம் தேதி கடைசி நாள். இந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக வருமான வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இந்த கால அவகாசத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது. 

அதன்படி, தனிநபர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 ஆம் தேதி வரையும், கம்பெனிகள் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 30 ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment